மேலும் செய்திகள்
இணை பதிவாளர் பொறுப்பேற்பு
24-Oct-2025
கடலுார்: கோலப்போட்டியில் பங்கேற்க, கூட்டுறவு சங்கங்களின் கடலுார் மண்டல இணைப் பதிவாளர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், 72வது அ னைத்திந்திய கூட்டுறவு வார விழா, நாளை முதல் வரும், 20ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாளை கடலுார் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில், கூட்டுறவு கொடியேற்றி வார விழா உறுதி மொழி ஏற்றல் மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் வளாகங்களில், கூட்டுறவு கொடியேற்றி, வட்டார அளவில் கோலம் மற்றும் ரங்கோலி போட்டி, நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஆர்வம் உள்ள மகளிர் கூட்டுறவு தொடர்பான கருத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் கோலப்போட்டிகள் ரங்கோலி போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்லலாம். தன்னிறைவிற்கான கருவிகளாக கூட்டுறவு சங்கங்கள் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட உள்ளது. வட்டார அளவில் முதல் பரிசு ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 600 ரூபாய், மூன்றாம் பரிசு 400 ரூபாய் வழங்கப்பட உள்ளது. கோலப்போட்டி நாளை காலை 6:30மணிக்கு வரக்கால்பட்டு, குறிஞ்சிப்பாடி, அங்குசெட்டிப்பாளையம், அண்ணாகிராமம், கீரப்பாளையம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், ஆதிவராகநத்தம், விருத்தாசலம், காவனுார், சேப்பாக்கம், ம.புடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகங்களில் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
24-Oct-2025