நுாலக புரவலர்களுக்கு அரசு பட்டயம் வழங்கல்
கடலுார் : கடலுார் துறைமுகம் சராங்கு தெரு நுாலகத்தில், புரவலர்களுக்கு அரசின் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நுாலகர் சுமதி வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவர் ராம முத்துக்குமரன், புரவலர்கள் குருதேவ் ஜூவல்லரி சந்திரகுமார், சேஷாசலம், செல்வராஜ், ஜெயந்தி, உதயக்குமார், குணசேகரன் ஆகியோருக்கு தமிழக அரசின் நுாலகப் புரவலர் பட்டயத்தை வழங்கினார்.அப்போது, ஓய்வுபெற்ற நுாலகர் சந்திரசேகரன், வணிகர் சங்க பேரவை மாவட்டத் தலைவர் ரத்தினா ஜூவல்லரி ரவிக்குமார், வாசகர் வட்டத் தலைவர் குமார், சரண்ராஜ், பிருந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். வடக்கு நுாலகர் பாலாம்பாள் நன்றி கூறினார்.