உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணம்: முதல்வர் ஸ்டாலின் தாக்கு

அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணம்: முதல்வர் ஸ்டாலின் தாக்கு

சென்னை: ''எப்பொழுது இரட்டை நிலைப்பாடு என்பது அதிமுகவுக்கு சாதாரணம் தான்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் எழுதிய நூல்களை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் ரகுமான் கானின் உரை இடி முழக்கமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரையில் ரகுமான் கான் ஸ்டார் பேச்சாளர். சட்டசபையில் திமுகவை காத்த மூவர் துரைமுருகன், சுப்பு, ரகுமான் கான். அதிமுக ஒரு விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது. எப்பொழுது இரட்டை நிலைப்பாடு என்பது அதிமுகவுக்கு சாதாரணம் தான்.

இரட்டை போக்கு

இது பற்றி சட்டசபையில் பேசிய ரகுமான் கான் என்ன சொன்னார் என்றால், சின்னமும் இரட்டை இலை, அதனால் இரட்டை போக்கு என்று சொன்னார். இதற்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. நேற்று பார்லிமென்டில் நாட்டை சர்வாதிகாரத்திற்கு நோக்கி நகர்த்த ஜனநாயக அமைப்புகளை வைத்து, பதவி நீக்கம் செய்ய ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். இதற்கு முன்னாடி குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள்.

ஜனநாயக பாதையில்...!

அப்போது எல்லாம் திமுக சார்பில் எப்படி கடுமையாக எதிர்த்தோமோ, அதே மாதிரி இந்த கருப்பு சட்டத்தை எதிர்ப்போம். இதனை எல்லாம் மக்கள் பிரச்னையில் இருந்து திசை திருப்புவதற்கு செய்கிறார்கள். மக்களுடைய கவனத்தை மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக செய்கிறார்கள். சிறுபான்மையினர் மக்களுக்கு திமுக துணை நிற்கும். திமுக இருப்பது உங்களுக்காக தான். சமுதாயத்திற்கு தான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

தமிழன்
ஆக 22, 2025 09:41

ஐயா உண்மையை ஒத்துக்கொண்டார் இந்த அரசு ஒரேயொரு சமூகத்திற்கு மட்டும் தான் என்று ரொம்ப நல்லவர்


என்றும் இந்தியன்
ஆக 21, 2025 17:33

அதிமுக இரட்டை நிலைப்பாடு ஓகே. திமுக ஒற்றை நிலைப்பாடு இந்துக்களை டாஸ்மாக்கினாட்டில் எதிர்ப்பது என்று


RAVINDRAN.G
ஆக 21, 2025 15:27

திமுகவின் இரட்டை நிலைப்பாடை பார்ப்போமோ: திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் சேர் நிலைபாடு ஒன்று செந்திலாண்டிக்கு ஒரு நிலையய் பாடு துறை முருகனுக்கு ஒரு நிலையபாடு. செஞ்சட்டைய்ய வீரர்களுக்கு என ஒரு நிலை பாடு கமலஹாசனுக்கு ஒரு நிலைப்பாடு உதயநிதிக்கு இன்பநிதிக்கு ஒரு நிலைப்பாடு துணை ஜனாதிபதி தமிழனுக்கு கிடைக்கக்கூடாது என ஒரு நிலைப்பாடு ஏன்னா நீங்க திராவிடர்களாச்சே பேச்சுக்கு தமிழ் என்ற நிலைப்பாடு. செய்வது எல்லாமே அதற்கு முரண்பாடு. உங்களால் உச்சி முகர்ந்து ஆற தழுவி பட்டம் சூட்டி மகிழும் ஒரு நிலைபாடு. அடுத்து உங்க வீட்டு குஞ்சு குழுவானுக்கு முடிசூட்ட துடிக்கும் நிலைபாடு. இன்னும் எத்தனைய் எத்தனையோ.


VSMani
ஆக 21, 2025 16:39

தகப்பன் ஒரு தமிழர் மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தார். மகன் துணை ஜனாதிபதி தமிழனுக்கு கிடைக்கக்கூடாது என செயல்படுகிறார்


என்றும் இந்தியன்
ஆக 21, 2025 17:35

ஓங்கோல் தெலுங்கர் குடும்பம் ரெட்டிக்குத்தானே ஆதரவு கொடுக்கும்


ஆரூர் ரங்
ஆக 21, 2025 14:59

சோனியா மன்மோகன் ஆட்சியில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க சட்டம் கொண்டுவந்த போது எதிர்பாராத விதமாக திமுக ஆதரித்தது. அந்த சட்டத்தால் அதிகமாக பாதிக்கப் பட்டது முஸ்லிம் சிறு வணிகர்கள்தான். தனது செயலுக்கு கருணாநிதி கூறிய காரணம் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தால் பிஜெபி உள்ளே வந்துவிடும். அதாவது தனக்கு வாக்களித்த முஸ்லிம்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. தனது மகள் வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும்.


V Venkatachalam
ஆக 21, 2025 14:23

நமக்கு 10 நிலைப்பாடு என்பது சர்வ சாதாரணம். அதில ரெண்டு மட்டும் முக்கியமானது. பிரதமர் மோடி வந்த போது கருப்ப பலூன் பறக்க விட்டது. மோடி திரும்பவும் வந்த போது வெள்ளை குடை பிடித்தது.


Pon Thiru
ஆக 21, 2025 14:05

ஒரு மனசாட்சி இல்லையா? இதை சொல்ல …எத்தனை முரண்பாடுகள் .. என்றுதான் விடியும்..


Svs Yaadum oore
ஆக 21, 2025 13:56

அரசு பேருந்தில் இருந்து விழுந்து மாணவர் பலி..திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து கதவை மூடாமல் அதி வேகமாக ஒட்டிய ஓட்டுனரின் அலட்சியத்தால் 11 வயது மாணவன் பரிதாப பலி.....தினம் தினம் இப்படி மக்கள் செத்து மடியுது ...இதை கவனிக்க விடியலுக்கு துப்பில்லை ....


B N VISWANATHAN
ஆக 21, 2025 13:52

இதுக்கு பேரு தான் கலி காலம். இரட்டை நிலைப்பாடு பற்றி திராவிட மாடல் அரசு பேசும், அதை நம்ம கேக்கணும். எல்லாம் தலைஎழுத்து


kumaran
ஆக 21, 2025 13:48

என்னக்கு ஒரே நிலைபாடு தான் ஊழல் நிலைபாடு தான் அதனால congress கூட தான் என் கூட்டணி


Svs Yaadum oore
ஆக 21, 2025 13:41

தூய்மை பணியாளர்களை நடு ராத்திரியில் அடித்து உதைத்து போலீஸ் இழுத்து செல்கிறது. அதே நேரம் விடியல் சொகுசாக சினிமா தியேட்டரில் உட்கார்ந்து கூலி படம் பார்க்குது ...கார்பொரேட் சாராய கம்பெனி போதை கம்பெனி நடத்தறவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் விடியல் மந்திரி என்றால் நாட்டு நிலைமை இவ்வளவு கேவலமாகத்தான் இருக்கும் ...சம்பளம் வருடா வருடம் ஏறும் ...ஆனால் மாதம் 23000 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்த தூய்மை பணியாளர்கள் இப்பொது தனியார் கம்பெனியில் மாதம் 16000 சம்பளத்தில் வேலை பார்க்கனுமாம் ..இதுதான் விடியல் சமூக நீதி .. ..இதில் ரெட்டை நிலைப்பாடு பற்றி பேச என்ன தகுதி ??....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை