உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டணி கட்சிக்கு ஜாக்பாட் நிர்வாகிகள் அதிருப்தி

கூட்டணி கட்சிக்கு ஜாக்பாட் நிர்வாகிகள் அதிருப்தி

கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள தொகுதி ஆளும் தி.மு.க.,வசம் உள்ளது. இந்த தொகுதியை 2021 தேர்தலில் வாங்குவதற்கு தி.மு.க., கூட்டணி கட்சி ஒன்று தீவிர முயற்சி செய்தது. முக்கிய நிர்வாகி ஒருவருக்காக அந்த தொகுதியை தி.மு.க., கேட்டுப்பெற்றது. தாங்கள் வெற்றி பெற வேண்டிய தொகுதியை, தி.மு.க.,விற்கு விட்டுக்கொடுத்தோம் எனக்கூறியே அந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆளும் கட்சியினரிடம் பல்வேறு காரியங்களை சாதித்து வருகின்றனர். ஆளும் கட்சியில் இருக்கும் தங்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை விட கூட்டணி கட்சிக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என ஆளும் கட்சியினர் பலர் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை