உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜே.கே.ஆர்.,டெக்ஸ் ஸ்லோகன் போட்டி

ஜே.கே.ஆர்.,டெக்ஸ் ஸ்லோகன் போட்டி

சிதம்பரம்: ஜே.கே.ஆர்., டெக்ஸ் ஜவுளி நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட 'சுலோகன்' போட்டியில் வெற்றி பெற்ற குடும்பத்தினருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. ஜே.கே.ஆர்., டெக்ஸ் ஜவுளி நிறுவனம் கிளைகளில், தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 'ஸ்லோகன்' போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில், வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நேற்று கார் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் ஜே.கே.ஆர்., டெக்ஸில் நேற்று, நடந்த நிகழ்ச்சியில், கிளையில் நடத்தப்பட்ட 'ஸ்லோகன்' போட்டியில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட, சிதம்பரம் அடுத்துள்ள அத்திப்பட்டை சேர்ந்த சரவணன்-எழில்மதி தம்பதிக்கு, ஜே.கே.ஆர்., டெக்ஸ் உரிமையாளர் ஜெயபால் புதிய கார் பரிசு வழங்கினார் . அப்போது, நிறுவனத்தின், நிர்வாக இயக்குநர் ரமேஷ் காந்தி, பாலாஜி, அரசு ஒப்பந்ததாரர் ரஜினிகாந்த் மற்றும் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ