மேலும் செய்திகள்
தவ அமுதம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
18-May-2025
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வில் 116 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலமாக பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று சாதனை படைத்தது.மாணவர்கள் நரேஷ், நேத்ரா ஸ்ரீ, நிஷாலினி, எழிலரசி, ரஞ்சனா ஆகியோர் 500க்கு 496 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். சுகேஷ், அட்சயா, பாஹிமாபர்வீன், ஷிவானி, நிவாஷினி ஆகியோர் 495 மதிப்பெண், முகில், ஹரிணி, சியாமளாதேவி, சுபர்ணா ஆகியோர் 494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.கணிதத்தில் 60 பேர், அறிவியலில் 18 பேர், சமூக அறிவியலில் 49 பேர் என மொத்தம் 127 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் முத்துக்குமரன் பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி நிர்வாக இயக்குனர் நவநீதம், தாளாளர் பரணிதரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலியபெருமாள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
18-May-2025