காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள்
கடலுார் : கடலுார் மாநகர காங்., சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.கடலுார், மஞ்சக்குப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, அவர் திருப்பாதிரிப்புலியூர் 26வது வார்டு மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாநில காங்., பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமையில், மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்டகல்வி உபகரணங்கள் வழங்கினார்மாவட்ட பொதுச் செயலாளர்கள் காமராஜ், கிஷோர், ராஜேஷ், வட்டாரத் தலைவர்கள் ராஜா, ராமகிருஷ்ணன் மற்றும் ராஜ்குமார், சாந்தி, ஐ.என்.டி.யூ.சி., ஆனந்தன், சங்கர், சோமு சுப்பிரமணி உட்பட பலர்பங்கேற்றனர்.