ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கஞ்சி கலய ஊர்வலம்
கிள்ளை: சிதம்பரம், கொத்தங்குடி ஊராட்சி, முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், ஆடிப்பூர விழாவையொட்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. சக்தி பீட தலைவர் கோபு தலைமை தாங்கினார். பொருளாளர் பாலகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், முன்னாள் கூடுதல் செயலாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். கஞ்சி கலய ஊர்வலத்தை, அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் துவக்கி வைத்தார். அண்ணாமலை நகர் ஐயப்ப சுவாமி கோவிலில் துவங்கிய ஊர்வலம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்தடைந்தது. தொடர்ந்து, ஓய்வு பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி, மாலதி கிருபானந்தன், முன்னாள் சக்தி பீட தலைவர் விஜயகுமாரி ரத்தினசபாபதி ஆகியோர் அபிேஷகத்தை துவக்கி வைத்தனர். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், பேராசிரியர் ஞானகுமார், மண்டல செயலாளர் கண்ணன், மணிவாசகம், அரியக்கொடி முத்தையன், லதா, சுமதி, தேவி, புவனா, பூமாதேவி, ஆனந்தன், சுவாதி, பிரியா, மகாலட்சுமி, மகேஸ்வரி, ராமு, சூர்யா, சாந்தி ராமலிங்கம் உட்பட ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.