நொண்டி வீரன் கோவில் கும்பாபிஷேகம்
கடலுார்: நொண்டி வீரன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் அடுத்த மண்டபம் கிராமத்தில் உள்ள நொண்டி வீரன், பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சுப்ரமணியன் சுந்தர அம்மாள் தலைமையில் நடந்தது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, 3 நாட்கள் சிறப்பு பூஜை நடந்தது. புதுச்சேரி எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பா.ஜ., மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொன்னுசாமி, ராஜவள்ளி, விஜய கமல், சுபஸ்ரீ உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.