வேலாயுதசுவாமி கோவிலில் 10ம் தேதி கும்பாபிேஷகம்
புவனகிரி : புவனகிரி ஆதிவராகநத்தம் வெற்றிவேலாயுத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம், வரும் 10ம் தேதி நடக்கிறது. புவனகிரி ஆதிவராகநத்தம் கிராமத்தில் வெற்றிவேலாயுத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக தர்மகர்த்தா மதியழகன் தலைமையில் விழா குழு அமைத்து பாலாலயம் செய்து, ஏற்பாடுகளை செய்து வந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 8 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு வெள்ளாற்றங்கரையில் இருந்து புனித நீர் குடங்கள் மற்றும் முளைப்பாரி வீதியுலா ் நடக்கிறது.தொடர்ந்து யாக சாலை பூஜைகளும், 10ம் தேதி காலை 9.00 மணிக்கு கடம் புறப்பாடு துவங்கி, காலை 10.30 மணிக்குள் விமானத்தில் புனித நீர் ஊற்றி,ஆதீனங்கள் முன்னிலையில் கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.