உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எல்லை மாரியம்மன் கோவிலில் வரும் 31ம் தேதி கும்பாபிஷேகம்

எல்லை மாரியம்மன் கோவிலில் வரும் 31ம் தேதி கும்பாபிஷேகம்

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம், வில்வராயநத்தம் எல்லை மாரியம்மன் கோவிலில், வரும் 31ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கடலுார் மஞ்சக்குப்பம், வில்வராயநத்தம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 28ம் தேதி காலை 5 மணி முதல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. 8 மணிக்கு மூலஸ்தானம், யந்திரஸ்தானம், அம்மன் பிரதிஷ்டை நடக்கிறது. 29ம் தேதி காலை 5 மணி முதல் வாஸ்துசாந்தி, யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 30ம் தேதி காலை இரண்டாம் கால யாகபூஜை, மாலை 5 மணி முதல் மூன்றாம் கால யாகபூஜை, நவசக்தி அர்ச்சனை, சுமங்கலி பூஜை, சகசினி பூஜை, கன்னிகா பூஜை, 108 யாக திரவிய ஹோமம், பூர்ணாஹூதி, மகா தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. 31ம் தேதி காலை 5 மணி முதல் நான்காம் கால யாக பூஜை, அம்மன் மூல மந்திரம் ஹோமம், பட்டுப் புடவை ஹோமம், அஸ்திர ஹோமம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி 7.30மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை