குட்டியாண்டவர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
கடலுார்: கடலுார், பச்சையாங்குப்பம் குட்டியாண்டவர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.கடலுார் அடுத்த பச்சையாங்குப்பம் கிழக்கு தெரு பூரண புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மாலை வாஸ்துசாந்தி பூஜைகள் நடந்தது. இன்று (7ம் தேதி) காலை 9:00 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.