குன்றக்குடி அடிகள் நுாற்றாண்டு விழா
கடலுார்: கடலுாரில் மாநகர தமிழ்ச்சங்கம் சார்பில் குன்றக்குடி அடிகள் நுாற்றாண்டு நிறைவு விழா நடந்தது. மாவட்ட தலைவர் சுதர்சனம் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். செயலாளர் நல்லதம்பி அறிமுக உரையாற்றினார். காங்கேயன் சிறப்புரையாற்றினார். சிறப்பு தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகரன், குன்றக்குடி அடிகள் படத்தை திறந்து வைத்து, வாழ்த்தி பேசினார். ஆசிரியர் சிவசுப்பிரமணியன் சொற்பொழிவு ஆற்றினார். தலைமை ஆசிரியர் கவி மனோ, எழுத்தாளர் முத்துக்குமாரின் 'அணிலாடும் முன்றில்' என்ற நுாலை அறிமுகம் செய்து பேசினார். நிர்வாகிகள் குமார், அரவிந்தன், ராமலிங்கம், டாக்டர் ரஹீமா, பழனி, வெங்கடேசன் மற்றும் சிங்காரம், முத்துக்குமரன், ராமச்சந்திரன், விவேகானந்தன், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, ஜெகரட்சகன், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். மனோகர் நன்றி கூறினார்.