உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் சாதனை

லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் சாதனை

கடலுார்,: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி கீர்த்தனா 500க்கு 488 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி லோகேஸ்வரி 486 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் ஹரிஹரன் 482 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 16 மாணவர்கள் 450க்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.பிளஸ் 1 தேர்வில் மாணவர் சஞ்சய்குமார் 600க்கு 540 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ஹரிதாலட்சுமி 539 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி ஜெயஸ்ரீ 527 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 10 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ