உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்சில் தவறவிட்ட லேப்டாப் பயணியிடம் ஒப்படைப்பு

பஸ்சில் தவறவிட்ட லேப்டாப் பயணியிடம் ஒப்படைப்பு

கடலுார்; கடலுாரில் அரசு பஸ்சில் பயணி தவறவிட்ட லேப்டாப்பை, ஒப்படைத்த டிரைவர் மற்றும் கண்டக்டரை அதிகாரிகள் பாராட்டினர்.சிதம்பரத்தை சேர்ந்தவர் சந்துரு,45. இவர் நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்திலிருந்து சென்னை சென்ற அரசு பஸ்சில் பயணித்தார். இரவு 8:00 மணிக்கு கடலுாரில் இறங்கியபோது, தனது லேப்டாப்பை பஸ்சிலேயே தவறவிட்டுவிட்டார். இதுகுறித்து பணிமனை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். பஸ் கண்டக்டரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், லேப்டாப் இருப்பதை உறுதி செய்தனர். அந்த லேப்டாப் பையை நேற்று காலை கண்டக்டர் ரமேஷ், கடலுார் பஸ் நிலையத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பணிமனை மேலாளர் மற்றும் பஸ் நிலைய பொறுப்பாளர் லேப்டாப்பை சந்துருவிடம் ஒப்படைத்தனர். பயணி தவறவிட்டை லேப்டாப்பை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த, கண்டக்டர் ரமேஷ் மற்றும் ஓட்டுனர் செந்தில்குமாரை, அதிகாரிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை