தாழ்தள பஸ்கள் துவக்கி வைப்பு
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் இருந்து தாழ்தள பஸ்கள் இயக்கத்தை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 1 மற்றும் 2ல் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், திட்டக்குடி, உளுந்துார்பேட்டை, சேத்தியாதோப்பு மார்க்கத்தில் புதிதாக தாழ்தள பஸ்கள் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடலுார் பொது மேலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணை மேலாளர் ரகுராமன், உதவி மேலாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் ரவி வரவேற்றார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், வட்டார தலைவர் ராவணன், சாந்தகுமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.