வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கண்டிப்பாக தண்டனை தேவை
மேலும் செய்திகள்
சட்ட விழிப்புணர்வு முகாம்
26-Jul-2025
நெய்வேலி: நெய்வேலி கோர்ட் வளாகத்தில் கழிப்பறையில் கேமரா வைத்து, பெண்ணை ஆபாச படம் எடுத்ததாக, வக்கீல் குமாஸ்தாவை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 20ல் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நெய்வேலி அடுத்துள்ள தென்குத்து கிராமத்தை சேர்ந்த பாவாடை மகன் பாஸ்கர், 28; என்பவர் வக்கீல் குமாஸ்தாவாக உள்ளார். கோர்ட்டில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு, அவர் கழிப்பறையில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து, மொபைல் போனிற்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, அப்பெண் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, பாஸ்கரை கைது செய்தார்.
கண்டிப்பாக தண்டனை தேவை
26-Jul-2025