மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
27-Feb-2025
கடலுார் : கடலுாரில் மூத்த வழக்கறிஞர் சிவமணிக்கு வழக்கறிஞர்கள், நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். கடலுாரில் மூத்த வழக்கறிஞர் சிவமணி பிறந்த நாள் விழா நடந்தது. இதனையொட்டி மூத்த வழக்கறிஞர் சிவமணி-கீதா சிவமணி தம்பதிக்கு வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா முகுந்தன் ஆகியோர் தலைமையில், வக்கீல் குமாஸ்தா பத்மநாபன், இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் உதவியாளர்கள், எம்.எஸ்., அலுவலக ஊழியர்கள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர். நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்கள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
27-Feb-2025