உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார், விருதையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார், விருதையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: ஒசூரில் வழக்கறிஞரை வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலுார் ஒருங்கிணைந்தகோர்ட் வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி, லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர்அமுதவள்ளி தலைமை தாங்கினர். ஓசூரில் வழக்கறிஞரை வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்

கோர்ட் வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விருதை பார் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். பார் அசோசியேஷன் தலைவர் சாவித்திரி செந்தில்குமார், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர்கள் பூமாலை குமாரசாமி, செல்வபாரதி, ராஜா, ஆனந்தகண்ணன், சரவணன், அய்யாசாமி, ரவிச்சந்திரன், ஜெயபிரகாஷ், சிவசங்கர், அப்துல்லா, மோகன், ஜெயராஜ், மோகன்ராஜ், முனுசாமி, ஆனந்தஜோதி, செல்வி, ஜென்னி, காயத்ரி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

சிதம்பரம்

காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். தலைவர் சிலம்புச் செல்வன், பொருளாளர் ஆழ்வார், துணை செயலாளர்கள் பாண்டியராஜன், ரமேஷ், அதியமான் முன்னிலை வகித்தனர்.வக்கீல்கள் மணிவண்ணன், செல்வகுமார், பெர்னாட்ஷா, வைத்திலிங்கம், கிள்ளை ரவீந்திரன், தயாநிதி, காரல் மார்க்ஸ், அமுதன், ரமேஷ், விஜய வர்மா, நிர்மல்ராஜ், திலீபன், உதயசூரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை