மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம்
15-Sep-2025
விருத்தாசலம்; சுப்ரீம் கோர்ட் நீதிபதியை அவமதித்த செயலை கண்டித்து, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசி அவமதித்த வழக்கறிஞரை கண்டித்து விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சங்கரய்யா தலைமை தாங்கினார். பூமாலை குமாரசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குமரகுரு, வழக்கறிஞர்கள் காசிவிசுவநாதன், வீரப்பன், புஷ்பதேவன், அப்துல்லா, ராஜ்மோகன், குபேரமணி, ரவிச்சந்திரன் பங்கேற்றனர். சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செயலாளர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் காமராஜ், மணிவண்ணன், வைத்திலிங்கம், ஆழ்வார் கண்டன உரையாற்றினர். வழக்கறிஞர்கள் செல்வகுமார், வேல் ராமலிங்கம், பீமாராவ், காரல் மார்க்ஸ், கண்ணன், அதியமான் பங்கேற்றனர்.
15-Sep-2025