உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நீதிமன்ற கட்டடத்தை சீரமைக்கக் கோரி, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருத்தாசலம் ஒருங்கிணைந் த நீதிமன்ற வளாகம் முன், பார் அசோசியேஷன் சங்கத் தலைவர் சாவித்ரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சங்கர் கணேஷ், ராஜா, சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், கூடுதல் சார்பு நீதிமன்றம் அருகிலுள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. மேற்கூரையில் மழைநீர் கசிவு, பழுது போன்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டி பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !