உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் ரூ. 1.31 கோடியில் எல்.ஈடி., விளக்குகள் அமைப்பு

சிதம்பரத்தில் ரூ. 1.31 கோடியில் எல்.ஈடி., விளக்குகள் அமைப்பு

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சியில், ரூ. 1.31 கோடியில் அமைக்கப்பட்ட எல்.இ.டி., விளக்குகளை சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.சிதம்பரம் நகராட்சி சார்பில், அலங்கார மின்கம்பங்கள் அமைத்து, எல்.இ.டி., விளக்குகள் அமைக்க 1.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.மின் விளக்கு அமைக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், முதல் கட்டமாக 78 மின் விளக்குகள் துவக்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. கஞ்சித்தொட்டி மற்றும் எஸ்.பி.கோவில் தெருவில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், சேர்மன் செந்தில்குமார் பங்கேற்று புதிய எல்.இ.டி., விளக்குகளை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் மல்லிகா, பொது பணி மேற்பார்வையாளர் ரம்யா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், கவுன்சிலர் ரமேஷ், வெங்கடேசன், ராஜன், மக்கின், அப்பு சந்திரசேகர், கவுன்சிலர்கள் ஜெயசித்ரா பாலசுப்ரமணியன், இந்துமதி அருள், சரவணன், கல்பனா, கவிதா சரவணன், லதா, தி.மு.க., நகர துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை