மது விற்றவர் கைது
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக் குப்பத்தை சேர்ந்த கண்ணையன் மகன் நாகசெல்வம், தனது வீட்டில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் சரக்கு விற்றது தெரிந்தது. இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகசெல்வம்,39; என்பவரைக் கைது செய்து, 10 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.