உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூட்டுக்கடைக்காரர் சாவு: போலீசார் விசாரணை

பூட்டுக்கடைக்காரர் சாவு: போலீசார் விசாரணை

பெண்ணாடம், : பெண்ணாடத்தில் பூட்டுக்கடைக்காரர் தலையில் அடிபட்டு இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம், மேற்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார், 57. இவரது வீட்டு முன்பு, பூட்டு பழுது பார்க்கும் கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் 1:30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவரை காணவில்லை. இந்நிலையில், இவரது கடை அருகே உள்ள காம்ப்ளக்ஸ் மாடியில், இரவு 9:30 மணியளவில் குமார் தலையில் அடிபட்ட நிலையில், மயங்கி கிடந்தார்.இதை பார்த்த அருகிலுள்ளவர்கள் குமாரை மீட்டு, பெண்ணாடம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இறந்தார்.குமார் மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, குமார் இறந்தது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி