உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கூழாங்கற்கள் கடத்திய லாரி  பறிமுதல்: டிரைவர் கைது

 கூழாங்கற்கள் கடத்திய லாரி  பறிமுதல்: டிரைவர் கைது

விருத்தாசலம்: கூழாங்கற்கள் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு உள்ளிட்ட போலீசார் நேற்று காலை வாகன சோதனை செய்தபோது, ஆலடி சாலையில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், கள்ளச்சந்தையில் கூழாங்கற்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, அதன் டிரைவர் ஆலடியை சேர்ந்த பாலமுருகன் மகன் ஆகாஷ், 21; என்பவரை கைது செய்தனர். மேலும், லாரி உரிமையாளர் புதுப்பேட்டை கனகராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி