உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை விபத்தில் லாரி டிரைவர் பலி

சாலை விபத்தில் லாரி டிரைவர் பலி

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த, டிப்பர் லாரி மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில், டிரைவர் இறந்தார்.அரியலுார் மாவட்டம், தத்தனுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், 40; இவர், டி. என். 93.டி.6453 பதிவெண் கொண்ட ஈச்சர் லாரியை, கடலுாாரில் இருந்து சிதம்பரத்திற்கு நேற்று அதிகாலை ஓட்டிச் சென்றார்.புதுச்சத்திரம் அடுத்த ஆணையம்பேட்டை பாலம் அருகே வந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது, எதிர்பாராமல் ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த விஜயகுமார் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ