மேலும் செய்திகள்
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
26-Sep-2024
கடலுார் : கடலுாரில் மா.கம்யூ., கட்சி சார்பில் 24வது மாநகர மாநாடு நடந்தது.மூத்த நிர்வாகி சிவராமன் கொடி ஏற்றினார். மாநகர குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பக்கீரான் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் மாதவன் ,மாவட்ட செயற்குழு மருதவாணன், சுப்புராயன் வாழ்த்துரை வழங்கினர். மாநகர செயலாளர் அமர்நாத் வேலை அறிக்கை வாசித்தார். மாநகர குழு உறுப்பினர் திருமுருகன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். இதில், கடலுார் துறைமுகத்தை ஆழப்படுத்தி விரிவுப்படுத்த வேண்டும். அதை நிலக்கரி சேமித்து வைக்கும் இடமாக மாற்றாமல் மற்ற சரக்குகளை கையாளும் துறைமுகமாகவும், சென்னைக்கு பயணிகள் போக்குவரத்து ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுாரில் நிலத்தடி நீரில் உப்புநீர் பரவுவதை தடுக்கவும், பாதுகாப்பாக அமைய ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, நிர்வாகிகள் ஸ்டாலின், தமிழ்மணி, பழனி, பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் மாதவன் நிறைவுரையாற்றினார். மாநகர குழு உறுப்பினர் கருணாகரன் நன்றி கூறினார்.
26-Sep-2024