உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிவாரணம் கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

நிவாரணம் கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே சவுடு மணல் குவாரியில் குளிக்கும்போது, இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சிக்குட்பட்ட சவுடு மணல் குவாரியில் குளிக்கும்போது, தண்ணீரில் மூழ்கி இறந்துப்போன பு.முட்லூரை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயசீலன், மாவட்ட குழு அம்சயாள், நகர செயலாளர் வேல்முருகன் மு ன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு ரமேஷ்பாபு கண்டன உரையாற்றினர். ஒன்றிய குழு அசன் முகமது மன்சூர், கொளஞ்சியப்பன், பாண்டியன், கோபிநாத், விமலா, தனசேகர், ஜீவா, உட்பட பலர் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை