மேலும் செய்திகள்
த.மு.மு.க., ஆர்ப்பாட்டம்
08-Dec-2024
கடலுார்,: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே, மா.கம்யூ., கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.செம்மண்டலம் பகுதி செயலாளர் தேவநாதன் தலைமை தாங்கினார். பக்தவச்சலம், அருள்பிரகாஷ், சக்திவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு மருதவாணன், மாநகர செயலாளர் அமர்நாத், மாவட்டக்குழு பக்கீரான் கண்டன உரையாற்றினர். இதில், கடலுார் நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை தென்பெண்ணை ஆற்றின் கரையை உயர்த்தி கான்கிரீட் வால் அமைக்க வேண்டும். கஸ்டம்ஸ் சாலை முழுவதும் மின்விளக்கு அமைக்க வேண்டும். வெள்ள நீர் புகுந்து பொருட்கள் இழந்த வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகையை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, நிர்வாகிகள் வெங்கடேசன், புருேஷாத்தமன், மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
08-Dec-2024