மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
27-Jul-2025
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், நாளை (28ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு 25ம் தேதி மாலை அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குராப்பணம், பாலிகை பூஜை நடந்தது. பூஜையில் ஜி.ஆர்.கே., குழும நிர்வாக இயக்குனர் துரைராஜ், என்ஜினியர் சந்தானகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று காலை கும்ப கலச தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கும்ப மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்தான பூஜை, முதல் கால ஹோமம் நடந்தது. இன்று காலை த்வார பூஜை, விமான கோபுரங்கள் திருமஞ்சனம், மூன்றாம் கால ஹோமம் நடக்கிறது. மாலை நான்காம் கால ஹோமம் நடக்கிறது. நாளை 28ம் தேதி காலை காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஐந்தாம் கால யாகசாலை நடக்கிறது. 7:00 மணிக்கு யாத்ராதானம், மஹா கும்பங்கள் புறப்பாடும், 8:30 மணிக்கு மேல் மூலவர் விமானங்கள் மற்றும் தோரணவாயிலில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஞானசுந்தரம், தக்கார் சரவணரூபன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
27-Jul-2025