மேலும் செய்திகள்
சாரதா கங்காதரன் கல்லுாரியில் 'சைட்டேஷன் டே' விழா
25-Apr-2025
கிருஷ்ணசாமி கல்லுாரியில் விளையாட்டு விழா
21-Apr-2025
கடலுார்: கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியின் 12ம் ஆண்டு விழா, நடந்தது.கல்லுாரி முதல்வர் இளவரசன் ஆண்டறிக்கை வாசித்தார். குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கொளஞ்சியப்பன், பிரைன் ஜிம் அகாடமியின் நிறுவனர் திருமுகம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, சிறப்புரையாற்றினர். விழாவில் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வாரிய தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு துறை வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டது. மாநில அளவில் நடந்த கைப்பந்து, பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மணிகண்டனுக்கும் பரிசு வழங்கப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மகாலட்சுமி கல்விக்குழுமங்களின் தலைவர் ரவி, கல்லுாரி தாளாளர் தேவகி, துணைத்தலைவர் ராக்கவ் தினேஷ், இயக்குனர் மதுமதி, காவியா பிரியா ஆகியோர் சான்றிதழ், பரிசு வழங்கினர். கல்லுாரி முதல்வர் இளவரசன், மேலாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷ்லி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
25-Apr-2025
21-Apr-2025