மேலும் செய்திகள்
ஆரோவில் பள்ளி சாம்பியன்
05-Sep-2025
சவுராஷ்டிரா கல்லுாரி சாம்பியன்
09-Sep-2025
கடலுார்: கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர். தமிழக அளவில் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையிலான பூப்பந்தாட்ட போட்டி கோயம்புத்துாரில் நடந்தது. நாகப்பட்டினம் - புதுச்சேரி மண்டலம் சார்பில், கடலுார் ஸ்ரீ மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இதையடுத்து வெற்றி பெற்ற அணியினரை, மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியின் துணைத் தலைவரும், மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவருமான ராக்கவ் தினேஷ் பாராட்டினார். உடற்கல்வி இயக்குனர் மணிகண்டன், கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர். இக்கல்லுாரி இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
05-Sep-2025
09-Sep-2025