மலேரியா விழிப்புணர்வு
திட்டக்குடி:திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நடந்தது. நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கி, மலேரியா காய்ச்சல் பரவும் விதம் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து, மலேரியா தின உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், மதனகோபால், லேப் டெக்னீஷியன் இளையராஜா, செவிலியர் மகேஸ்வரி மற்றும் களப்பணியாளர்கள், நோயாளிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.