உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மலையனுார் கிராம சபை கூட்டம்; அமைச்சர் கணேசன் பங்கேற்பு

மலையனுார் கிராம சபை கூட்டம்; அமைச்சர் கணேசன் பங்கேற்பு

சிறுபாக்கம்; சிறுபாக்கம் அடுத்த மலையனுாரில் கிராம சபை கூட்டம் நடந்தது.மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சரண்யா, மங்களூர் ஒன்றிய ஆத்மா குழு தலைவர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தேவராஜ் வரவேற்றார்.கூட்டத்தில், அமைச்சர் கணேசன் பங்கேற்று பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் கிராமங்கள் வளர்ச்சி அடைய மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகிறது.மலையனுார் கிராம மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும், ரூ. 14 கோடி வழங்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் வளர்ச்சி பெற பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்துகிறார்' என்றார்.கூட்டத்தில், வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், மங்களூர் பி.டி.ஓ., வீராங்கன், வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம், தி.மு.க., ஒன்றிய செயலர் அமிர்தலிங்கம், தி.மு.க., நிர்வாகிகள் குமணன், திருவள்ளுவன், ராஜசேகர், சின்னதுரை, ஊராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி மருதை, ஊராட்சி செயலர் கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை