மினி சரக்கு வேனுடன் தலைமறைவானவர் கைது
வானுார் : வானுார் அருகே வாடகைக்கு ஓட்டிய மினி வேனுடன் தலைமறைவான நபரை, உரிமையாளர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.வானுார் அடுத்த மொரட்டாண்டி ஆர்ச்சார்டு கார்டன் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார், 39; இவர் தனது மினி சரக்கு வேனை கடலுார் மாவட்டம், நடுவீரபட்டு பகுதியை சேர்ந்த கண்ணன், 42; என்பவரிடம் வாடகைக்கு விட்டு வைத்திருந்தார்.வாரம்தோறும், கண்ணன் தான் ஓட்டி வந்த வேனுக்குரிய வாடகை பணத்தை, உரிமையாளரிடம் சரியாக கொடுத்து வந்தவர், நாளடைவில், பணம் கொடுக்கவில்லை.இதனால், வேனை கொண்டு வந்து தன்னிடம் ஒப்படைக்கும்படி சாந்தகுமார் கூறியுள்ளார். ஆனால் கண்ணன், வேனை ஒப்படைக்காமல் தலைமறைவானார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மொரட்டாண்டி பகுதிக்கு மினி வேனுடன் வந்த கண்ணனை, சாந்தகுமார், கையும் களவுமாக பிடித்து ஆரோவில் போலீசில் ஒப்படைத்தார்.புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.