உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரேஷன் ஊழியரை தாக்கியவர் கைது

 ரேஷன் ஊழியரை தாக்கியவர் கைது

வடலுார்: ரேஷன் கடை ஊழியரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். வடலுார், சேராக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு, 54; இவர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த செல்வம் தரப்பினர் கூடுதலாக ரேஷன் பொருட்கள் கேட்டு, ஆனந்தவேலு தர மறுத்ததால் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தவேலு வெளியே சென்ற போது அவரை வழிமறித்து, செல்வம் தரப்பினர் தாக்கினர். இதனை தட்டி கேட்ட ஆனந்தவேலு உறவினர்களின் பைக்குகளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து வடலுார் போலீசில் ஆனந்தவேலு புகார் அளித்தார். தாக்குதலில் ஈடுபட்ட செல்வம், 40; கைது செய்யப்பட்டார். மேலும், அவர் தரப்பை சேர்ந்த ரணதேவன், 46, குருதேவன், 42, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை