உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு வேலைக்கு பணம்: மோசடி ஆசாமி கைது

அரசு வேலைக்கு பணம்: மோசடி ஆசாமி கைது

சிதம்பரம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள மழவராய நல்லுார் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கனகசபை மகன் சத்யராஜ். இவருக்கு சிதம்பரம் அருகே உள்ள உத்தமசோழமங்கலம் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தீபக் ,41 என்பவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். தொடர்ந்து சத்யராஜிடம் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் 13 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால் தற்போது வரை அவருக்கு வேலை வாங்கித் தரவில்லை. இந்நிலையில் சத்யாராஜ், தீபக் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தீபக், சத்யராஜை அசிங்கமாக தி ட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து சத்யராஜ் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை