மேலும் செய்திகள்
வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
15-Oct-2025
கஞ்சா பதுக்கல் : வாலிபர் கைது
11-Oct-2025
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஹாட் சிப்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் பிருந்தாவனம் நகரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் குமார், 35. இவர் ஹாட் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 24ம் தேதி இவரது கடைக்கு வந்த மர்ம நபர், தன்னை பேடிஎம் ஏஜென்ட் என கூறியுள்ளார். லோன் எடுப்பதற்காக கோரிக்கை மனு பரிசோதனை செய்ய வந்ததாக தெரிவித்துள்ளார். கடன் வட்டி விகிதத்ததை குறைப்பதாக கூறி, குமார் வங்கி கணக்கில் இருந்து, கியூ.ஆர்., மூலம் மூன்று தவணைகளாக 3 லட்சத்து 15 ஆயிரத்து 668 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானார். இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதி ந்து, விசாரணை நடத்தினர். அதில், ஏஜென்ட் என கூறி ஏமாற்றியது சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சீனிவாச பெருமாள், 43, என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சீனிவாச பெருமாளை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15-Oct-2025
11-Oct-2025