உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணிடம் செயின் பறிப்பு மர்ம நபருக்கு வலை

பெண்ணிடம் செயின் பறிப்பு மர்ம நபருக்கு வலை

சின்னசேலம் : குரால் அருகே பெண்ணிடம் 7 சவரன் நகையை பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மனைவி தீபா, 37; இவரது மகள் தாகம்தீர்த்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளியில் நேற்று பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தீபா நேற்று மதியம் 1:00 மணியளவில் தனது எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றார்.குரால் கூட்ரோடு அருகே சென்றபோது பின்னால் மஞ்சள் நிற டிஷர்ட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர், தீபா பைக்கில் மோதுவது போல் வந்துள்ளார். இதனால் நிலை தடுமாறிய தீபா தனது மொபட்டை நிறுத்தினார்.அப்போது அந்த மர்ம நபர் தீபா அணிந்திருந்த 7 சவரன் தாலிச்செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ