உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மொபைல் போன் பறித்தவர் கைது

 மொபைல் போன் பறித்தவர் கைது

குள்ளஞ்சாவடி: பைக்கில் சென்று மொபைல் போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். குள்ளஞ்சாவடி அடுத்த பள்ளி நீரோடை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 46; இவர் சில தினங்களுக்கு முன் மனைவியுடன் பைக்கில் குள்ளஞ்சாவடியில் இருந்து ஆலப்பாக்கம் நோக்கி சென்றார் . அப்போது அதே சாலையில் பின்புறமாக வேகமாக வந்த பைக்கில் வந்த இருவர், செல்வகுமார் மேல் சட்டை பையில் வைத்திருந்த மொபைல் போனை பறித்து தப்பினர். குள்ளஞ் சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து ராசாபேட்டை பகுதியை சேர்ந்த முருகன் மகன் மாதேஷ், 20; கடலுார் முதுநகர், பச்சையாங்குப்பம் குமார் மகன் ஆகாஷ், 19; ஆகியோர் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்த து. இதில் மாதேஷை கைது செய்து, அவர் பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மாயமான ஆகாஷை போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை