மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் திருட்டு
01-Apr-2025
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
12-Apr-2025
சேத்தியாத்தோப்பு; வீரமுடையாநத்தம் முத்துமாரியம்மன்கோவில் சாமி ஊர்வலத்தில் உண்டியலை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையாநத்தம் முத்துமாரியம்மன்கோவில் சாமி ஊர்வலம் கடந்த 12 ஆம் தேதி இரவு நடந்தது.ஊர்வலத்தில் உண்டியல் குடத்தை எடுத்து செல்லும்போது பொதுமக்கள் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம். சாமி ஊர்வலம் அதிகாலை 5.00 மணியளவில் முடித்து சாமி சிலைகளை கோவிலில் இறக்கி வைத்து சென்றுவிட்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் வரவு செலவு கணக்கு பார்ப்பதற்காக உண்டியல் குடத்தினை தேடியபோது காணவில்லை.இது குறித்து கோவில் தர்மகர்த்தா ராஜா சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் வீரமுடையாநத்தம் நடுத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வபாரத், 27; உண்டியலை எடுத்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவானது தெரியவந்தது.இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து செல்வபாரத்தை கைது செய்து உண்டியல் அதிலிருந்த மூவாயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
01-Apr-2025
12-Apr-2025