உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துக்கம் நடந்த வீட்டில் ரூ.3.50 லட்சம் திருடியவர் கைது

துக்கம் நடந்த வீட்டில் ரூ.3.50 லட்சம் திருடியவர் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த துக்கம் நடந்த வீட்டில், பேக்கரி உரிமையாளரின் பணம் ரூ. 3.50 லட்சம் திருடிய நபரை போலீசார் கைது செய்து, பணத்தை மீட்டனர்.புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம். இவர், காடாம்புலியூரில் நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தார். துக்க வீட்டு வாசலில் ரூ.3.50 லட்சம் பணம் வைத்திருந்த பையை வைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்று வந்தார். அதற்குள் பணம் இருந்த பையை காணவில்லை.இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் செந்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, துக்க வீட்டிற்கு வந்திருந்தவர்களை பற்றி விவரம் சேகரித்தனர். அதில், காடாம்புலியூர் சமத்துவபுரம் செவ்வந்தி வீதியை சேர்ந்த செந்தில்,37; என்ற பழைய திருட்டு குற்றவாளி வந்து சென்றது தெரியவந்தது. அதையடுத்து, அவரை பிடித்து விசாரித்ததில் பணம் திருடியதை ஒப்புக்காண்டார்.போலீசார், செந்திலை கைது செய்து, அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ. 3.50 லட்சம் பணத்தை மீட்டனர். பணம் திருடு போன சில மணி நேரங்களில் மீட்ட காடாம்புலியூர் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை