உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆற்றில் மணல் திருடிய ஆசாமி கைது

 ஆற்றில் மணல் திருடிய ஆசாமி கைது

காட்டுமன்னார்கோவில்: ஆற்றில் மணல் திருடி மூட்டையில் கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த கொண்டாயிருப்பு நடேசன் மகன் வீரமணி, 46; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் சாக்கு முட்டையில் மணல் எடுத்து பைக்கில் வைத்து கடத்தி சென்று விற்பனை செய்தார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் மூட்டை கடத்திய வீரமணியை மடக்கி பிடித்தனர். போலீசார் வீரமணி மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மணல், பைக் பறிமுதல் செய்யப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை