மேலும் செய்திகள்
சாலை விபத்தில் முதியவர் பலி
16-Jul-2025
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையை கடக்க முயன்றபோது அரசு விரைவு பஸ்மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநற்குணம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் தசரதகுமார்,56; இவர் நேற்று மாலை 3.00 மணியளவில் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் வங்கிக்கு வந்து பணம் எடுத்துவிட்டு மீண்டும் சின்னநற்குணம் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் ஆணைவாரி சாலையில் செல்வதற்கு வி.கே.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக சென்ற டிஎன்.01 ஏ என் 4314 என்ற அரசு விரை பஸ் மோதியதில் தசரதகுமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Jul-2025