மேலும் செய்திகள்
முன்விரோத தகராறு 6 பேர்மீது வழக்கு
15-Nov-2026
கடலுார்: மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து கொத்தனார் இறந்தார். கடலுார், வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்,34; கொத்தனார். இவர், கடந்த 16ம் தேதி அதே பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டின் முதல் தளத்தின் மாடியில் கைப்பிடி சுவரில் அமர்ந்திருந்த போது, தவறி கீழே விழுந்தார். அதில் படுகாயமடைந்த மணிகண்டனை, மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Nov-2026