உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்தவர் சாவு

பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்தவர் சாவு

கிள்ளை: பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார். சிதம்பரம் அடுத்த அம்பூட்டியபாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்தயாநிதி, 56; தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ளஆற்று பாலத்தின் தடுப்பு கட்டை மீது அமர்ந்திருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி, ஆற்றில் விழுந்து, உயிருக்கு போராடினார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதுகுறித்து அவரது மனைவி மேகலாராணி கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை