மேலும் செய்திகள்
தீ விபத்தில் முதியவர் பலி
08-Aug-2026
விருத்தாசலம்: மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மங்கலம்பேட்டை அடுத்த தொட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் முத்தையன்,69; இவர் கடந்த 11ம் தேதி ஆடுகளுக்கு, தழை ஒடிக்க, தனது நிலத்தில் உள்ள மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்தார். அதில் படுகாயமடைந்த அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
08-Aug-2026