உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் காயமடைந்தவர் மயங்கி விழுந்து சாவு

விபத்தில் காயமடைந்தவர் மயங்கி விழுந்து சாவு

கடலுார்: விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார். கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமரன்,42; திருமணமாகி 3 ஆண்டு ஆகிறது. தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 4ம் தேதி விருதுநகரில் மாமனார் வீட்டிற்கு சென்று தங்கினார். அப்போது, பைக்கில் சென்ற போது, ஆட்டோ மோதியதில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், கடலுாரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குமரன் இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை