உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ.,வை தாக்கியவர் கைது

வி.ஏ.ஓ.,வை தாக்கியவர் கைது

சிதம்பரம் : சிதம்பரத்தில் வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த பரமேஸ்வரநல்லுார் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல். இவர், கடந்த 11ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலர், அரசுக்கு சொந்தமான பாசன வாய்க்காலில் வீடு கட்டும் பணிக்காக மோட்டார் மூலமாக தண்ணீர் எடுத்ததை தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், வெற்றிவேலை தாக்கினர். புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய நபர்களை கைது செய்யக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக தண்டேஸ்வரநல்லுார் ரவிச்சந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !