உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனக்குப்பம் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

மனக்குப்பம் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

கடலுார் : சாலை வசதி மற்றும் சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கடலுார் அடுத்த மனக்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;மனக்குப்பம் மகாலட்சுமி நகரில் வடிகால் வசதியும், சாலை வசதியும் இல்லாமல் வசித்து வந்தோம். பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்ததால், 5 சாலைகள் இருக்கும்பட்சத்தில் மூன்று சாலைகளில் மட்டும் ஜல்லி, செம்மண் கொட்டினர். வடிகால் அமைத்து சாலை அமைக்க வேண்டும். வடிகால் தண்ணீர், குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்றுநோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ